< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அனைத்து மாநில சட்டத்துறை மந்திரிகள் மாநாடு குஜராத்தில் நாளை தொடக்கம்!
|13 Oct 2022 8:15 PM IST
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை மந்திரிகள் மாநாடு நாளை குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள, மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை மந்திரிகள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் மாநாடு அக்டோபர் 14, தேதி தொடங்கி அக்டோபர் 16, 2022 வரை குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற உள்ளது.
இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ முக்கிய உரையாற்ற உள்ளார். சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் இந்த முன்னெடுப்பு மூலம், இந்திய சட்டமுறை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சட்டத்துறை மந்திரிகள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.