< Back
தேசிய செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுக்காக 16-ந் தேதிக்குள் டெல்லி வர பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அழைப்பு
தேசிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக 16-ந் தேதிக்குள் டெல்லி வர பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அழைப்பு

தினத்தந்தி
|
8 July 2022 11:38 PM IST

ஜனாதிபதி தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்கும்வகையில், 18-ந் தேதிவரை டெல்லியிலேயே தங்கி இருக்குமாறு கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல், வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 2 நாட்கள் முன்கூட்டியே, அதாவது 16-ந் தேதிக்குள் டெல்லிக்கு வருமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்கும்வகையில், 18-ந் தேதிவரை டெல்லியிலேயே தங்கி இருக்குமாறு கூறியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அந்த 2 நாட்களும் அவர்களுக்கு கட்சி சார்பில் பயிற்சி மற்றும் ஒத்திகை அமர்வு நடத்தப்படுகிறது.

மேலும், 16-ந் தேதி இரவு, பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவருக்கும் அக்கட்சி தலைவர் ஜே.பி.நட்டா விருந்து அளிக்கிறார்.

மேலும் செய்திகள்