< Back
தேசிய செய்திகள்
சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் 3-வது முறையாக தேர்வு

Image Courtesy: PTI  

தேசிய செய்திகள்

சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் 3-வது முறையாக தேர்வு

தினத்தந்தி
|
29 Sept 2022 11:15 PM IST

அகிலேஷ் யாதவ் தொடர்ந்து 3-வது முறையாக சமாஜ்வாதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லக்னோ,

சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் தொடர்ந்து 3-வது முறையாக இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் மட்டுமே போட்டியிட்டதை தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த முடிவை ராம் கோபால் யாதவ் அறிவித்தார்.

2017 ஜனவரியில் நடந்த சமாஜ்வாதி கட்சியின் அவசரக் கூட்டத்தில் தந்தை முலாயம் சிங் யாதவிற்கு பிறகு முதல் முறையாக கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அதே ஆண்டு அக்டோபரில் ஆக்ராவில் நடந்த கட்சியின் தேசிய மாநாட்டில் 2-வது முறையாக அவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவரானார்.

மேலும் செய்திகள்