< Back
தேசிய செய்திகள்
மசூதிகளை அடுத்து தர்கா: அஜ்மீர் தர்கா இந்து ஆலயம்..? - புதிய சர்ச்சையால் ராஜஸ்தானில் பதற்றம்
தேசிய செய்திகள்

மசூதிகளை அடுத்து தர்கா: "அஜ்மீர் தர்கா இந்து ஆலயம்..?" - புதிய சர்ச்சையால் ராஜஸ்தானில் பதற்றம்

தினத்தந்தி
|
27 May 2022 8:32 PM IST

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவை இந்து ஆலயம் என இந்து அமைப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா இந்து ஆலயம் என்பதால் தொல்லியல்த்துறை ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் உள்ளிட்ட இஸ்லாமிய வழிப்பாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் இந்து ஆலயமாக இருந்தது என இந்து அமைப்புகள் கூறி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா உள்ளது. இந்த தர்காவை இந்து ஆலயம் என்று கூறும் மஹாரான பிரதாப் சேனா அமைப்பு தர்காவில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஹஜ்மீர் தர்காவில் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் இந்துக்களின் ஸ்வஸ்தி குறியீடு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் தர்கா நிர்வாகம் ஆதாரமற்றை கூற்றை இந்து அமைப்பு முன்வைப்பதாக பதிலளித்துள்ளது. இந்து அமைப்பு கூறுவதுபோல் தர்காவில் எந்த ஸ்வஸ்தி குறியீடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்