< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மாநில அரசியலின் அமிதாப் பச்சன், அஜித்பவார் - சுப்ரியா சுலே
|18 Jun 2023 4:51 AM IST
அஜித்பவார் மாநில அரசியலின் அமிதாப் பச்சன் போன்றவர் என்று சுப்ரியா சுலே கூறினார்.
தேசியவாத காங்கிரசில் சுப்ரியா சுலேக்கு தேசிய செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை. இதற்கு அஜித்பவார் வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவின. இதுபற்றி மும்பையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அளித்த சுப்ரியா சுலே எம்.பி., "யார்- யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது எங்களது உள்கட்சி விவகாரம். அஜித்பவார் மாநில அரசியலின் அமிதாப் பச்சன் போன்றவர். அஜித்பவார் செல்லும் இடங்களில் ஆட்டோகிராப் வாங்கவும், செல்பி எடுக்கவும் பலர் விரும்புகிறார்கள் " என்று குறிப்பிட்டார்.