விமானப்பணிப்பெண் பாலியல் பலாத்காரம் அரசியல் பிரமுகர் கைது
|குடிபோதையில் விமானப்பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி
டெல்லியில் மெஹ்ருலி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஹர்ஜீத் யாதவ், என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கான்பூரில் வசிக்கும் ஹர்ஜீத் அப்பகுதியின் அரசியல் கட்சியின் தொகுதித் தலைவராக உள்ளார்.
இவர் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் என்னவென விசாரித்து கொண்டிருந்தார் அந்த விமான பணிப்பெண்.
மதுபோதையில் நிதானம் இல்லாமல் இருந்த அந்த அரசியல்வாதி திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்துள்ளார். அந்த பெண் இதெல்லாம் தவறு , என்னிடம் இது போல் நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை என கூறி பார்த்தார்.
நான் சாதாரணமாக பழகியதற்கு இப்படி ஒரு மோசமான செயலை என்னிடம் செய்யாதே என வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் ஹர்ஜித்தோ அதையெல்லாம் காதில் வாங்காமல் மிகவும் மோசமாக பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றி உள்ளார். இதனால் அச்சம் அடைந்த அந்த பெண், போதையில் இருந்த ஹர்ஜித்தை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.
இதையடுத்து போலீசாருக்கு அந்த இளம்பெண் போன் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போதும் ஹர்ஜித்துக்கு போதை தெளியாமல் இருந்தது. அந்த பெண்ணிடம் புகாரை வாங்கிக் கொண்டனர்.
புகாரின் அடிப்படையில் 376 (கற்பழிப்பு), 323 (தன்னிச்சையாக புண்படுத்துதல்), 509 (ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வார்த்தை, சைகை அல்லது செயல்) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரை கைஅது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூகவலைதளங்களில்தான் பழக்கம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.