< Back
தேசிய செய்திகள்
விதிமுறைகளை மீறியதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம்
தேசிய செய்திகள்

விதிமுறைகளை மீறியதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம்

தினத்தந்தி
|
11 Feb 2023 11:00 PM IST

விதிமுறைகளை மீறியதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பயணிகள் விமானங்களை இயக்கும் விமானிகள், விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டவர்களாகவும், விதிமுறைகளை பின்பற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். இது அவ்வப்போது பரிசோதிக்கப்படும்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏர் ஏசியா விமானங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது 8 விமானிகள், சில கட்டாய பயிற்சிகளை பெறவில்லை என்பதும், பயிற்சிகள் சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டன. அதைத் தொடர்ந்து விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் அந்த பயிற்சியின் மேலாளர், பயிற்சி அளிக்கும் தலைவர் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளித்தனர். அதை ஆராய்ந்த விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், இந்த விஷயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாக கூறி ஏர் ஏசியா நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் தலைமைப் பயிற்சியாளர் 3 மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். 8 விமானிகளுக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சமீபத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சிறுநீர் கழிப்பு விவகாரத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 2 விமான நிறுவனங்களும் டாடா குழுமத்துக்கு சொந்தமானவை.

மேலும் செய்திகள்