< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் காற்று மாசு - தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு - தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை

தினத்தந்தி
|
3 Nov 2023 6:24 AM IST

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தலைமையில் சீராய்வு கூட்டம் ஒன்று டெல்லி செயலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு மற்றும் அதனை தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை அடுத்து, 2 நாட்களுக்கு அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, இன்றும், நாளையும் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்