< Back
தேசிய செய்திகள்
நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - அவசர அவசரமாக தரையிறக்கம்
தேசிய செய்திகள்

நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - அவசர அவசரமாக தரையிறக்கம்

தினத்தந்தி
|
21 Nov 2023 3:29 PM IST

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து பயணிகளுடன் இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த விமானி அவசர அவசரமாக விமானத்தை மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் நியூயார்க் புறப்பட்டனர்.

மேலும் செய்திகள்