< Back
தேசிய செய்திகள்
பையில் வெடிகுண்டா உள்ளது? என கேட்ட விமான பயணி கைது
தேசிய செய்திகள்

பையில் வெடிகுண்டா உள்ளது? என கேட்ட விமான பயணி கைது

தினத்தந்தி
|
11 Aug 2024 3:36 PM IST

பையில் வெடிகுண்டா உள்ளது? என்று கேட்ட விமான பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் கொச்சியில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த வகையில் மும்பை செல்லவிருந்த மனோஜ் குமார் என்ற பயணியின் பை உள்ளிட்ட உடமைகளை மத்திய தொழிற்பாதுகாப்புப்படை அதிகாரி சோதனை செய்தார். அப்போது, சோதனை செய்துகொண்டிருந்த பாதுகாப்புப்படை அதிகாரியிடம், எனது பையில் வெடிகுண்டா உள்ளது? என்று கேட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப்படை அதிகாரி, பயணி மனோஜ் குமாரிடம் விசாரணை நடத்தினார். மேலும், விமான நிலையத்தில் வெடி குண்டு கண்டறியும் குழுவினர் சோதனை நடத்தினர். சோதனையில் எந்த வித அச்சுறுத்தும் பொருட்களும் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான பயணி மனோஜை பாதுகாப்புப்படையினர் கைது செய்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்