< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முதல்முறை வாக்காளர்களுக்கு கட்டண சலுகை அறிவித்த விமான நிறுவனம்
|19 April 2024 2:47 AM IST
வாக்களிக்க விமானத்தில் செல்லும் 18 முதல் 22 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களுக்கு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
18-வது மக்களவை தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பல லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்களாக வாக்களிக்க உள்ளனர்.இந்த நிலையில் ஓட்டுப்போட சொல்லும் முதல்முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலில் வாக்களிக்க விமானத்தில் செல்லும் 18 முதல் 22 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களுக்கு ஏர் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 19 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சலுகை ஜூன் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.