< Back
தேசிய செய்திகள்
இந்திய ராணுவத்துடன் இணைந்து விமானப்படை கூட்டு போர் பயிற்சி
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்துடன் இணைந்து விமானப்படை கூட்டு போர் பயிற்சி

தினத்தந்தி
|
12 Jun 2023 6:03 AM IST

மத்திய செக்டாரில் இந்திய ராணுவத்துடன் இணைந்து விமானப்படை கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படையும், ராணுவமும் சேர்ந்து மத்திய செக்டார் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இவ்விரு படைகளின் செயல்பாட்டு தயார் நிலையைப் பரிசோதிக்கவே இந்த கூட்டு போர் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை விமானப்படை ஒரு டுவிட்டர் பதிவில வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், "மத்திய செக்டாரில் இந்திய ராணுவத்துடன் இணைந்து சமீபத்தில் விமானப்படை கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் யதார்த்தமான போர் சூழ்நிலைகளை விளக்கும் வகையில் பல்வேறு போர் தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டு போர் பயிற்சி எங்கு, எப்போது நடைபெற்றது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்