< Back
தேசிய செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு - டெல்லி கோர்ட்டு சம்மன்
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு - டெல்லி கோர்ட்டு சம்மன்

தினத்தந்தி
|
31 Jan 2024 7:03 PM IST

டாக்டர் தீபக் குப்தா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

எய்ம்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர் தீபக் குப்தா. இவர் மீது டெல்லி ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் பெண் டாக்டர் ஒருவர் அளித்துள்ள புகாரில், தீபக் குப்தா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

இதனிடையே அந்த பெண் டாக்டர் கர்ப்பமானதாகவும், அந்த கருவை கலைக்குமாறு தீபக் குப்தா வற்புறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தீபக் குப்தா மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நீதிபதி விஜயஸ்ரீ ரத்தோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 26-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எய்ம்ஸ் டாக்டர் தீபக் குப்தாவிற்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்