< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்

தினத்தந்தி
|
26 July 2023 2:30 PM IST

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், அது குறித்து விவாதிக்க கோரியும் அதிமுக சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். அண்மையில் நடந்த வருமானவரித்துறை சோதனையின் போது மத்திய அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து குறுகிய கால விவாதம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.




மேலும் செய்திகள்