< Back
தேசிய செய்திகள்
குஜராத் தேர்தல்: வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
5 Dec 2022 9:31 AM IST

குஜராத் சட்டமன்றத்திற்கு இரண்டாவது கட்டமாக இன்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அகமதாபாத்,

குஜராத் சட்டமன்றத்திற்கு இரண்டாவது கட்டமாக இன்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்ட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்று வாக்களித்தார்.

பிரதமர் மோடி வாக்களிக்க வருகை தந்ததால் அங்கு பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. பிரதமரைக் காண அங்கு பெருமளவில் மக்களும் திரண்டு நின்று இருந்தனர். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேலும் செய்திகள்