< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள்...!!!
|27 Aug 2023 1:50 PM IST
டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
புது டெல்லி,
டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 5 மெட்ரோ நிலைய சுவர்களில் 'டெல்லி பனேகா காலிஸ்தான்', 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற வாசகங்கள் மர்ம நபர்களினால் எழுதப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 9-ந் தேதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வாசகங்களை எழுதிவிட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
போலீசார் தரப்பில் அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.