< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அக்னிபத் கலவரம்: மதுராவில் அரசு பஸ்கள், வாகனங்கள் மீது கல்வீச்சு..!
|17 Jun 2022 3:38 PM IST
உத்தரபிரதேசம், மதுராவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரா,
நாடு முழுவதும் 'அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு' எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார், வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், மதுராவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கல்வீசியும், தீ கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி அடித்து கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.