< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
|11 March 2024 6:32 PM IST
அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றிக்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
பல்வேறு இலக்குகளை துல்லியமாகவும் தன்னிச்சையாகவும் தாக்கும் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணை, மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த அக்னி 5 ஏவுகணையின் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றிக்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய டிஆர்டிஓ விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.