< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அக்னி-1 குறுகிய தொலைவு ஏவுகணை பரிசோதனை வெற்றி
|7 Dec 2023 9:30 PM IST
அக்னி-1 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"அக்னி-1 என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை, ஒடிசாவின் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை மிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. ஏவுகணையின் அனைத்து செயல்பாடுகளும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது." என்று தெரிவித்துள்ளது.