< Back
தேசிய செய்திகள்
2 வருட கொரோனா தடைகளுக்கு பிறகு ராஜஸ்தானில் களைகட்டும் கல்யாண சீசன்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

2 வருட கொரோனா தடைகளுக்கு பிறகு ராஜஸ்தானில் களைகட்டும் 'கல்யாண சீசன்'

தினத்தந்தி
|
31 Oct 2022 2:58 AM IST

2 வருட கொரோனா தடைகளுக்கு பிறகு ராஜஸ்தானில் ‘கல்யாண சீசன்’ களைகட்ட துவங்கி உள்ளது

ஜெய்பூர்,

கொரோனா தொற்று பேரிடராக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் சுமார் 2 வருட காலம் அன்றாட வாழ்க்கையும், தொழில்களும் முடங்கின. கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்ததால் கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விடைபெற்று விட்டன. கோவில் விழாக்கள் மற்றும் சமூக விழாக்களுக்கு மக்கள் தடையின்றி சென்று வருகிறார்கள்.

இதுபோலவே வரப்போகும் கல்யாண காலமும் களைகட்டப்போகிறது. தமிழகத்தில் தை, மாசி தொடங்கி வைகாசி வரையில் ஏராளமான திருமணங்கள் நடை பெறும். வடக்கு மாநிலங்களிலும் நவம்பர் 4-ந்தேதியில் இருந்து அடுத்த 6 மாதங்கள் கல்யாண சீசனாக கருதப்படுகிறது. இந்த காலங்களில் அங்கு அனேக திருமணங்கள் நடைபெறும்.

இந்த திருமண காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 1.5 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் பந்தல் வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் கூறும்போது, "மக்கள் திருமண கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்கள். நவம்பர் தொடங்கி 6 மாத காலத்தில் 1.5 லட்சம் திருமணங்கள் ராஜஸ்தானில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளில் திருமண விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், கடந்த ஆண்டு சுமார் 40 ஆயிரம் திருமணங்களே நடந்தன. இந்த ஆண்டு அதிக பட்சமாக 1.5 லட்சம் திருமணங்கள், கொண்டாட்டங்களுடன் நடைபெற உள்ளன. அடுத்த 5 மாதங்களுக்கு மண்டபங்கள், ஓட்டல்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டுவிட்டன" என்றார்.

மேலும் செய்திகள்