< Back
தேசிய செய்திகள்
திருப்பதியை தொடர்ந்து கேரளா குருவாயூர் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

திருப்பதியை தொடர்ந்து கேரளா குருவாயூர் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

தினத்தந்தி
|
17 Sept 2022 11:30 PM IST

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

திருவனந்தபுரம்,

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்காக ரூ1.5 கோடியை நன்கொடையாகவும் முகேஷ் அம்பானி அளித்தார்.

இதனை தொடர்ந்து இன்று கேரளா சென்ற முகேஷ் அம்பானி, அங்குள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். கோவிலின் ஆடை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வேஷ்டி அணிந்து கொண்டு அவர் கோவிலுக்கு சென்றார்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று முகேஷ் அம்பானி, சாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்