< Back
தேசிய செய்திகள்
சித்தராமையாவுக்கு பின் சிவக்குமார்... காங்கிரஸ் பொது செயலாளருடன் சந்திப்பு
தேசிய செய்திகள்

சித்தராமையாவுக்கு பின் சிவக்குமார்... காங்கிரஸ் பொது செயலாளருடன் சந்திப்பு

தினத்தந்தி
|
17 May 2023 11:22 PM IST

டெல்லியில் காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபாலை சித்தராமையா சந்தித்து விட்டு வெளியே சென்ற பின் சிவக்குமார் நேரில் சந்திக்க சென்றுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. எனினும், முதல்-மந்திரி பதவியை யார் கைப்பற்றுவது? என்பதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். இந்த நிலையில், இருவரும் தனித்தனியே ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். எனினும், முதல்-மந்திரி யாரென்று அறிவிப்பதில் மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் கர்நாடக பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை கர்நாடக முதல்-மந்திரி விவகாரம் பற்றி பேசுவதற்காக அவர்களை சித்தராமையா சந்தித்து விட்டு வெளியே சென்றார்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபாலை நேரில் சந்திப்பதற்காக டி.கே. சிவக்குமார் சென்றார். அவரை வழியில் நிருபர்கள் சந்தித்தபோது அவர்களிடம், கூறுவதற்கு எந்த விசயமும் இல்லை.

இந்த விவகாரம் பற்றிய முடிவை கட்சி மேலிடத்திடம் நாங்கள் விட்டு விட்டோம். கட்சி தலைமை அழைத்திடுவார்கள். நான் ஓய்வெடுக்க போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்