ராமர் நெற்றியில் சூரிய திலகம்: விமானத்தில் இருந்தபடி வணங்கிய பிரதமர் மோடி
|அயோத்தியில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி காட்சியை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஸ்ரீ ராம நவமி தினமான இன்று (ஏப்ரல் 17) அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள் திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றியில் பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. அயோத்தியில் ராமர் நெற்றியில் சூரிய ஒளி விழுந்தது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில்,அசாம் பேரணிக்குப் பிறகு, இந்த வீடியோவை விமான பயணத்தின் போது 'டேப்'ல் பிரதமர் மோடி பார்த்து வழிபட்டார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
மேலும், ‛‛அயோத்தியில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி காட்சியை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த சூரிய திலகம் வளர்ந்த இந்தியாவின் ஒவ்வொரு தீர்மானத்தையும் அதன் தெய்வீக ஆற்றலால் ஒளிரச் செய்யும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.