< Back
தேசிய செய்திகள்
மனைவியை தோளில் தூக்கி மலையேறிய கணவன் - மனைவியின் சவாலை ஏற்று சாகசம்
தேசிய செய்திகள்

மனைவியை தோளில் தூக்கி மலையேறிய கணவன் - மனைவியின் சவாலை ஏற்று சாகசம்

தினத்தந்தி
|
3 Oct 2022 8:17 AM IST

மனைவியின் ஏற்றுக் கொண்ட கணவர், மனைவியை தோள் மீது சுமந்து கொண்டு படியேறத் தொடங்கினார்.

திருப்பதி,

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்த வரதவீர வெங்கட சத்யநாராயணாவும், அவருடைய மனைவி லாவண்யாவும் திருப்பதிக்கு வந்திருந்தனர்.

கணவர் வேகவேகமாக படியேறி செல்வதை பார்த்த லாவண்யா, முடிந்தால் தன்னை தோள் மீது வைத்துக்கொண்டு படியேறுங்கள் என்று சவால் விட்டார். அதை ஏற்றுக் கொண்ட கணவர், மனைவியை தோள் மீது சுமந்து கொண்டு படியேறத் தொடங்கினார்.

இதைப் பார்த்த மற்ற பக்தர்கள், இவர்களை வீடியோ எடுத்தனர். சிலர் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்தனர். 70 படிகள் ஏறி வந்த பிறகு கணவரின் தோளில் இருந்து லாவண்யா இறங்கிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்