< Back
தேசிய செய்திகள்
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
தேசிய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
6 Aug 2024 4:03 PM IST

எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர் மருத்துவமனையின் மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அத்வானி கடந்த மாதம் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேபோல கடந்த ஜூன் மாதம் இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்