< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... தட்டி கேட்ட மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... தட்டி கேட்ட மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

தினத்தந்தி
|
8 July 2024 8:55 AM IST

தன்னை கொடூரமாக தாக்கியதுடன் தற்கொலை செய்யும்படி மிரட்டுவதாக கணவர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கபிதரஹள்ளுவை சேர்ந்தவர் கரஷோத்தம். இவரது மனைவி ஷில்பா. இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கரஷோத்தம் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இளம்பெண்ணுடன், கரஷோத்தமுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1½ ஆண்டாக அந்த இளம்பெண்ணுடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தெரிகிறது. இதுபற்றி ஷில்பாவுக்கு தெரியவந்ததும், இளம்பெண்ணுடன் உள்ள உறவை கைவிடும்படி கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் கள்ளத்தொடர்பை கைவிட கரஷோத்தம் மறுத்து விட்டார்.

இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இளம்பெண்ணை தனது வீட்டுக்கே கரஷோத்தம் அழைத்து வந்துள்ளார். கணவரும், கள்ளக்காதலியும் ஒன்றாக இருப்பதை ஷில்பா புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கரஷோத்தம், ஷில்பாவை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஷில்பாவை தற்கொலை செய்து கொள்ளும்டியும் கரஷோத்தம் மிரட்டியுள்ளார். நீ தற்கொலை செய்தால் தான் என்னால் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கரஷோத்தம் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஷில்பா, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்தும், கள்ளத்தொடர்பை கைவிட மறுப்பதுடன், தன்னை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும், தற்கொலை செய்யும்படி கணவர் மிரட்டுவதாகவும் மாதநாயக்கனஹள்ளி போலீசில் ஷில்பா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கரஷோத்தமை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்