உணவு பாதுகாப்பு: கேரளாவில் கலப்பட நெய் விற்ற 3 நிறுவனங்களுக்கு தடை
|கேரளாவில் கலப்பட நெய் விற்ற 3 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மூன்று நெய்களில் கலப்படம் இருப்பதை உணவு பாதுகாப்பு துறை கண்டறிந்துள்ளது.
முன்னதாக திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜோய்ஸ், மேன்மா, எஸ்.ஆர்.எஸ். ஆகிய நிறுவனத்தினர் நெய்யுடன் தாவர எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி, நெய்யை மற்ற எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளின் கலவையாக விற்பது குற்றமாகும். எனவே, உணவு பாதுகாப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த மூன்று பிராண்டுகளின் விற்பனை மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டது.