பிரதமர் மோடியுடன் அதிமுக எம்.பி தம்பிதுரை திடீர் சந்திப்பு
|டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில் திடீரென சென்று சந்தித்து பேசி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில் திடீரென சென்று சந்தித்து பேசி உள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் இந்த சந்திப்பு சுமார் 10 நிமிட நேரம் நடந்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்க சந்தித்து விட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டியிடும் நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியை எடப்பாடியின் ஆதரவாளரான தம்பிதுரை எம்.பி. சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.