< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'அ.தி.மு.க. விதி திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது' - தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி மனு
|20 April 2023 12:12 AM IST
அ.தி.மு.க. விதி திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
அ.தி.மு.க.வின் கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி டெல்லி ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் சார்பாக பா.ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிச்சாமி ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை கட்சி விதிகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது எனவும் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இந்த மனு மீது முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.