< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
|21 Dec 2023 4:57 PM IST
மக்களவையின் அலுவல்கள் ஒருநாள் முன்னதாகவே முடிவுற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளை (22-ந்தேதி) வரை நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வண்ண புகைக்குண்டுகள் வீச்சு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் என பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மக்களவையின் அலுவல்கள் ஒருநாள் முன்னதாகவே முடிவுற்று, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.