< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
|20 Jun 2024 1:27 PM IST
ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி,
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் ஜூலை 3-ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சிறப்பு நீதிபதி நியாய் பிந்து முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்டார். இதையடுத்து ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.