< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்த சுனிதா கெஜ்ரிவால், அதிஷி
|29 April 2024 6:15 PM IST
சுனிதா கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மந்திரி அதிஷி ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர்.
புதுடெல்லி,
கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மந்திரி அதிஷி ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டெல்லி மந்திரி அதிஷி, பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கிறதா என்றும், மொஹல்லா கிளினிக்குகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறதா என்று கெஜ்ரிவால் கேட்டதாக தெரிவித்தார்.
கெஜ்ரிவாலை நேற்று சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.