< Back
தேசிய செய்திகள்
தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் - நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

"தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" - நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
15 Dec 2022 7:36 PM IST

தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை இன்னும் அகற்றாதது ஏன் என செந்தில்குமார் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தின் போது பேசிய தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

விதிமுறைகளின்படி 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், தமிழகத்தில் தற்போது 57 சுங்கச்சாவடிகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி உறுதியளித்து 9 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் சுங்கச்சாவடிகளை அகற்றாதது ஏன் என செந்தில்குமார் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்