< Back
தேசிய செய்திகள்

Image Courtesy : ANI
தேசிய செய்திகள்
'ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் மருத்துவ கல்லூரிகள்' - பிரதமரிடம் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை

28 Dec 2022 6:45 PM IST
ஆந்திர பிரதேசத்தில் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில விவகாரங்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் ஜெகன் மோகன் ரெட்டி முன்வைத்தார்.
குறிப்பாக பொல்லாவரம் நீர்பாசன திட்டத்திற்காக மாநில அரசு இதுவரை 2,900 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஆந்திர பிரதேசத்தில் கூடுதலாக 14 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு வெங்கடாஜலபதி சிலையை ஜெகன் மோகன் ரெட்டி அன்பளிப்பாக வழங்கினார்.