< Back
தேசிய செய்திகள்
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கமல்பந்திற்கு கூடுதல் பொறுப்பு
தேசிய செய்திகள்

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கமல்பந்திற்கு கூடுதல் பொறுப்பு

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கமல்பந்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கமல்பந்திற்கு கூடுதல் பொறுப்பும், தார்வார் போலீஸ் கமிஷனராக முதல் முறையாக பெண் ஐ.பி.ஸ். அதிகாரியை நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போலீஸ் நியமன பிரிவு டி.ஜி.பி.யாக இருந்து வரும் கமல்பந்திற்கு கூடுதல் பொறுப்பாக கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு டி.ஜி.பி. பதவியையும் அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இரட்டை நகரமான உப்பள்ளி-தார்வார் போலீஸ் கமிஷனராக ரேணுகா சுகுமாரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக ஊர்க்காவல் படை துணை கமிஷனராக இருந்த ரேணுகா சுகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு உப்பள்ளி-தார்வார் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன்மூலம் உப்பள்ளி-தார்வார் மாவட்டத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை ரேணுகா சுகுமாருக்கு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்