< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிப்பூர் கவர்னர் இல.கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு
|17 July 2022 11:41 PM IST
மணிப்பூர் கவர்னர் இல.கணேசனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அடுத்த மாதம் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.