< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கல்லூரி படிப்பில் நடிகர் புனித் ராஜ்குமார் குறித்த பாடம் சேர்ப்பு
|23 Dec 2022 2:38 AM IST
கல்லூரி படிப்பில் நடிகர் புனித் ராஜ்குமார் குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 45) கடந்த ஓராண்டுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மறைவு கன்னடர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு கர்நாடக அரசு, மாநிலத்தின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கி கவுரப்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரு பல்கலைக்கழகம், கல்லூரி பி.காம். டிகிரி படிப்பில் 3-வது செமஸ்டரில் வணிக கன்னடம் என்ற பாடத்தில் புனித் ராஜ்குமார் குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த பாடத்தில் லோகித் என்ற மரிமுத்து (குழந்தை முத்து) என்ற பெயரில் அந்த பாடம் இடம் பெற்றுள்ளது.