< Back
தேசிய செய்திகள்
ஒயின் குடிக்கும் கன்னட நடிகை
தேசிய செய்திகள்

'ஒயின்' குடிக்கும் கன்னட நடிகை

தினத்தந்தி
|
3 Sept 2023 12:15 AM IST

கன்னட நடிகை சோனு சீனிவாஸ் கவுடா ஒயின் குடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பெங்களூரு:

கன்னடத்தில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனு சீனிவாஸ் கவுடா. இவர் டிக்-டாக் மூலமும் பிரபலமானார். மேலும் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் போட்டியிலும் பங்கேற்று பரபரப்பாக பேசப்பட்டார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் கதறி அழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தன்னைப்பற்றி அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அது தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார். இந்த நிலையில் அவர் நேற்று புதிதாக ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணாடி டம்ளரில் ஒயின் குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் தான் மாலத்தீவில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்