< Back
தேசிய செய்திகள்
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு; விசாரணையை நீட்டித்து செல்வது நல்லதல்ல - காவல்துறைக்கு நீதிபதி கண்டனம்
தேசிய செய்திகள்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு; விசாரணையை நீட்டித்து செல்வது நல்லதல்ல - காவல்துறைக்கு நீதிபதி கண்டனம்

தினத்தந்தி
|
3 July 2022 6:43 AM IST

நடிகை பாலியல் துன்புறத்தல் வழக்கை தேவையில்லாமல் நீட்டித்துக் கொண்டு செல்வது நல்லதல்ல என்று காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

கேரள நடிகை கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறத்தல் செய்யப்பட்ட வழக்கு கேரள ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரம் அடங்கிய மெமரி கார்டை மீண்டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பக் கோரி, குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை பாலியல் துன்புறத்தல் செய்யப்பட்ட வழக்கை தேவையில்லாமல் நீட்டித்துக் கொண்டு செல்வது நல்லதல்ல என்று காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். விசாரணையை முடிப்பதற்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றும், ஆனால் விசாரணை நீண்டு கொண்டே செல்வதாகவும் தெரிவித்த அவர், இது காவல்துறை உள்ளிட்ட பலரையும் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்