கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நடிகை பிரணிதா
|நாகர பஞ்சமி பண்டிகையையொட்டி கோவிலில் நடிகை சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பெங்களூரு:
கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர், பிரணிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தொழில் அதிபர் சுபாசை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் நடிகர் திலீப்புடன் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று நாகர பஞ்சமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் நாகதேவதைகளுக்கும், நாக கோவில்களிலும் பால் ஊற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி நடிகை பிரணிதா, பெங்களூருவில் உள்ள நாகதேவதை கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
அப்போது அவருடன் அவரது மாமியாரும் இருந்தார். நாகர பஞ்சமி பண்டிகையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய புகைப்படங்களை நடிகை பிரணிதா தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.