< Back
தேசிய செய்திகள்
நடிகை பவித்ரா, நரேசை செருப்பால் தாக்க முயற்சி-  ரம்யா ரகுபதி செயலால் பரபரப்பு
தேசிய செய்திகள்

நடிகை பவித்ரா, நரேசை செருப்பால் தாக்க முயற்சி- ரம்யா ரகுபதி செயலால் பரபரப்பு

தினத்தந்தி
|
4 July 2022 3:15 AM IST

நடிகை பவித்ரா, நரேசை செருப்பால் தாக்க முயன்ற ரம்யா ரகுபதியால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு: மைசூருவை சோ்ந்தவர் பவித்ரா லோகேஷ். பிரபல கன்னட நடிகையான இவர், தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பவித்ரா லோகேசும், பிரபல தெலுங்கு நடிகர் நரேசும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் ெவளியானது. மேலும் நடிகர் நரேசின் மனைவி ரம்யா ரகுபதி, தன்னையும், கணவரையும் பவித்ரா லோகேஷ் பிரித்து விட்டதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதற்கு பவித்ரா லோகேஷ் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக பவித்ரா லோகேசும், நடிகர் நரேசும் தனித்தனியாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். அவர்கள் 2 பேரும் வெளியிட்ட வீடியோவில், இடங்கள் ஒரே மாதிரியாக இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ஓட்டலில் ஒன்றாக இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் நடிகை பவித்ரா லோகேசும், நடிகர் நரேசும் ஒரே ஓட்டலில் தனித்தனி அறையில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் நரேசின் மனைவி ரம்யா ரகுபதி அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது, நரேசும், பவித்ராவும் ஓட்டலில் இருந்து ஒன்றாக வெளியே வந்தனர். அப்போது அவர்களை மடக்கிய ரம்யா ரகுபதி, 2 பேரையும் செருப்பால் தாக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் 2 பேரையும் பத்திரமாக மீட்டு லிப்டில் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்