< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா வழிகாட்டல் குழுவில் நடிகை குஷ்பு
|9 July 2022 4:28 AM IST
53-வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
53-வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் விழாவுக்கு ஒரு வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவுக்கு தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி, தலைவராக இருப்பார். தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி மற்றும் துறை செயலாளர் உள்பட 13 பேர் அலுவல்சார் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
மேலும், அலுவல் சாரா உறுப்பினர்களாக திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகை குஷ்பு, இயக்குனர் பிரியதர்ஷன் உள்பட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.