பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முக அமைப்பு மாறியது
|பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கியது.
பெங்களூரு
பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருபவர் சுவாதி. இவர் நடிகை ஆவார். கன்னடத்தில் ஒருசில படங்களில் சுவாதி நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் அந்த ஊசியை சுவாதி செலுத்தி உள்ளார். இதன்பின்னர் சுவாதியின் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது.
இதனால் அவர் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை. மேலும் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் தொடர்பு கொண்டு சுவாதி கேட்ட போது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் சுவாதி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.