நடிகர் சிவராஜ்குமாரின் புதிய தோற்றம்
|நடிகர் சிவராஜ்குமாரின் புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு:
கன்னட திரைப்பட நடிகரான சிவராஜ்குமார் எந்தவித தோற்றத்தை ஏற்று நடித்தாலும் அதற்கு பொருத்தமானவர் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியிருந்தார். டோரே படத்தில் சேட்டைக்காரராகவும், ஜோகி படத்தில் அப்பாவியாகவும், ஓம் படத்தில் ரவுடியாகவும், சிகுரிட கனசு படத்தில் அறிவுஜீவியாகவும் நடித்து இருப்பார். இந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமாரின் புதிய தோற்றம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது சிவராஜ்குமார் பைலட் சீருடையிலும், ரெயில் நிலைய நடைமேடை இருக்கையில் ரெயில்வே மாஸ்டர் தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அவர் தற்போது தமிழ் நடிகர் தனுசுடன் கேப்டன் மில்லர் படத்திலும், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சிவராஜ்குமாரின் இந்த புதிய தோற்ற படங்கள், கேப்டன் மில்லர் படத்தின் வேடமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.