< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் 20 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு
|19 July 2024 4:03 PM IST
திஷா குமார், கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
மும்பை,
முன்னாள் நடிகரும் டி-சீரிஸ் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் 20 வயது மகள் தீஷா குமார். இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இதற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்த நிலையில், ஜெர்மனியில் மேல் சிகிச்சை பெற்று வந்த திஷா குமார், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி-சீரிஸின் செய்தித் தொடர்பாளரும் திஷாவின் மறைவு குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.