< Back
தேசிய செய்திகள்
காவிரி போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு; நடிகர் துருவ் சர்ஜா பேட்டி
தேசிய செய்திகள்

காவிரி போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு; நடிகர் துருவ் சர்ஜா பேட்டி

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

காவிரி போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு என்று நடிகர் துருவ் சர்ஜா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துருவ் சர்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் சகோதரி மகன் ஆவார். இந்த நிலையில் துருவ் சர்ஜா காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நடிகர் என்ற பெயரை ஒதுக்கிவைத்துவிட்டு கன்னடராக விவசாயி மகனாக காவிரி விவகாரத்திற்கு குரல் கொடுப்பேன். எங்கள் திரையுலகத்துறையினர் அனந்த்நாக், ரவிச்சந்திரன், ஜக்கேஷ், சிவராஜ்குமார் ஆகியோர் முடிவெடுத்து காவிரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம். காவிரி போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு. காவிரி பிரச்சினை என்பது புதிது அல்ல. திரைப்படத் துறையில் மூத்த நடிகர்கள் உள்ளனர். அவர்கள் என்ன முடிவு செய்தாலும் அவர்களுடன் நாங்கள் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்