< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடிகர் திகந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார்; மனைவி அன்ட்ரிதா ராய் தகவல்
|23 Jun 2022 3:50 AM IST
ஆஸ்பத்திரியில் இருந்து நடிகர் திகந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று மனைவி அன்ட்ரிதா ராய் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கன்னட நடிகர் திகந்த், கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது கடற்கரையில் சம்மர்ஷாட் எனப்படும் பல்டி அடிக்கும் சாகசம் செய்த போது தவறி விழுந்தார். இதில் திகந்தின் முதுகு, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் பெங்களூரு மணிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். திகந்திற்கு நேற்று முன்தினம் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த நிலையில் திகந்தின் உடல்நிலை குறித்து நடிகையும், அவரது மனைவியுமான அன்ட்ரிதா ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
திகந்த் தற்போது நலமாக உள்ளார். விரைவில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். கோவாவில் இருந்து பெங்களூருவுக்கு திகந்தை அழைத்து வர விமான ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி கொடுத்த கோவா அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.