< Back
தேசிய செய்திகள்
பவன் கல்யாண் கட்சி நிதிக்காக சிரஞ்சீவி ரூ.5 கோடி நன்கொடை
தேசிய செய்திகள்

பவன் கல்யாண் கட்சி நிதிக்காக சிரஞ்சீவி ரூ.5 கோடி நன்கொடை

தினத்தந்தி
|
9 April 2024 6:01 AM IST

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக நிதி திரட்டுவதில் பவன் கல்யாண் மும்முரமாக உள்ளார். இதனையடுத்து தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருந்த அவரை அங்கு சென்று பவன் கல்யாண் நேரடியாக சந்தித்த நிலையில் ரூ.5 கோடிக்கான காசோலையை சிரஞ்சீவி அவரிடம் வழங்கினார். பின்னர் பவன் கல்யாண் கட்சி நிர்வாகிகளுடன் சிரஞ்சீவிடம் ஆசி பெற்றார்.

மேலும் செய்திகள்