< Back
தேசிய செய்திகள்
நட்சத்திர ஜோடி ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹா திருமணம்; மைசூருவில் கோலாகலமாக நடந்தது
தேசிய செய்திகள்

நட்சத்திர ஜோடி ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹா திருமணம்; மைசூருவில் கோலாகலமாக நடந்தது

தினத்தந்தி
|
27 Jan 2023 2:05 AM IST

நட்சத்திர ஜோடி ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹா திருமணம் மைசூருவில் கோலாகலமாக நடந்தது.

மைசூரு:

நட்சத்திர ஜோடி ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹா திருமணம் மைசூருவில் கோலாகலமாக நடந்தது.

ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹா

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹரிப்பிரியா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரும் கன்னட நடிகர் வசிஷ்ட சிம்ஹாவும் காதலித்து வந்தனர். மேலும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களின் திருமணத்தை 26-ந்தேதி (அதாவது நேற்று) மைசூருவில் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி மைசூரு கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் இவா்களின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தது.

திருமணம்

இந்த நிலையில் நட்சத்திர ஜோடியான ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹாவின் திருமணம் நேற்று கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் கோலாகலமாக நடந்தது. ஹரிப்பிரியா கழுத்தில் வசிஷ்ட சிம்ஹா தாலி கட்டினார். இந்த திருமணத்தில் மந்திரி எஸ்.டி.சோமசேகர், நடிகர் சிவராஜ்குமார், நடிகை அம்ரிதா, பிரதாப் சிம்ஹா எம்.பி., ராமதாஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டு ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் கன்னட திரையுலகினர் மற்றும் அவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நாளை வரவேற்பு

ஹரிப்பிரியா-வசிஷ்ட சிம்ஹாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூருவில் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ளது.

மேலும் செய்திகள்