< Back
தேசிய செய்திகள்
விமான கட்டண விவகாரம் குறித்து நடவடிக்கை - மத்திய மந்திரி உறுதி
தேசிய செய்திகள்

விமான கட்டண விவகாரம் குறித்து நடவடிக்கை - மத்திய மந்திரி உறுதி

தினத்தந்தி
|
26 July 2024 5:39 AM IST

விமான கட்டண விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு உறுதியளித்தார்.

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன், விமானக் கட்டண விவகாரம் குறித்து கேள்வி கேட்டார். அவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றபோது அது தோல்வியில் முடிந்து விட்டதாகவும், பின்னர் முயற்சி செய்தபோது கட்டணம் பலமடங்கு உயர்ந்து இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதனை சபாநாயகர் உள்பட மேலும் பல உறுப்பினர்களும் ஆமோதித்து, இதன்பேரில் நடவடிக்கை எடுக்க கேட்டனர். இதற்கு பதில் அளித்த சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு, "இதற்கென ஒரு மேற்பார்வை அலகு இருக்கிறது. இந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும். எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்